IIT Bombay-ல் மாணவர் தற்கொலை எதிரொலி! 😢 விடுதி அறைகளில் மேற்கூரை விசிறிகள் அகற்றம்!

 
ஐஐடி

 

மும்பையில் உள்ள ஐஐடி பாம்பேவில் மாணவர் சாஹில் வகோடே உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், விடுதி அறைகளில் உள்ள மேற்கூரை மின்விசிறிகளுக்கு பதிலாக சுவரில் பொருத்தப்படும் மின்விசிறிகளை நிறுவும் பணி தொடங்கியுள்ளது.ஐஐடி பாம்பேவின் விடுதிகளில் ceiling fan-களை wall-mounted fan-களாக மாற்றும் திட்டம் ஏற்கனவே பரிசீலனையில் இருந்ததாகவும், இது விரிவான விடுதி சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாகும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாஹில் வகோடே மரணத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

மும்பை ஐஐடி

ஐஐடி பாம்பேவின் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவரான சாஹில் வகோடே, செப்டம்பர் 18-ம் தேதி விடுதி அறையில் உயிரிழந்தார். இதையடுத்து மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் நலன், குறைதீர் நடைமுறை மற்றும் சம்பவம் தொடர்பான விசாரணை உள்ளிட்ட விவகாரங்களில் மாற்றம் கோரி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பேராசிரியர் சூர்யநாராயண டூல்லா, ஐஐடி பாம்பேவின் Dean of Administrative Affairs பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சாஹில் வகோடேவின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டூல்லாவின் பெயரும் போலீஸ் வழக்கில் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில், அவர் தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சாஹில் தேர்வு அறையில் இருந்தபோது நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்வு முடிந்த பிறகு சாஹில் விடுதிக்கு சென்றது முதல் அடுத்தடுத்த நிகழ்வுகள் வரை காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாஹிலின் மரணத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஐஐடி பாம்பே நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளன.