ஐஐடியில் 23 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பியுங்க!

தமிழகத்தில் சென்னை ஐஐடியில் நூலகர் உட்பட 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இந்நிறுவனத்தில் ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி நிறுவனம் :ஐ.ஐ.டி. மெட்ராஸ்
காலிப் பணியிடங்கள் : 23
பதவி : நூலகர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, துணை பதிவாளர், தொழில்நுட்ப அதிகாரி, உதவி பதிவாளர், இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் பதவிகள் A
பணியிடம் : சென்னை
கல்வித்தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்புகளை படித்திருக்க வேண்டும். அது சார்ந்த பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / திறன் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வு நடைபெறும் இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு நேர்முகத்தேர்வு வைக்கப்படும். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கட்டணம் : தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தேர்வுக்கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-5-2025
இணையதள முகவரி : https://recruit.iitm.ac.in/
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!