ஐஐடி மாணவர்களுக்கு ஜாக்பாட்: ஏஐ, ரோபாட்டிக்ஸ் படிப்புகளில் 6,000 புதிய இடங்கள்!

 
ஐஐடி

 

இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் வரும் 2027-ஆம் ஆண்டு முதல் ரோபாட்டிக்ஸ், பிசிகல் ஏஐ (Physical AI) மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சுமார் 6,000 புதிய இடங்களைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பூபத் மற்றும் ஜோதி மேத்தா குடும்ப அறக்கட்டளையுடன் இணைந்து நாட்டின் முன்னணி ஐஐடிகள் இந்த விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன.

IITs Set To Add 6,000 Seats In Robotics, Physical AI, Space Tech From 2027: Report

இதில் 5,000 இடங்கள் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடப்பிரிவுகளுக்கும், 1,000 இடங்கள் விண்வெளிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இளங்கலை பி.டெக், முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் இந்த இடங்கள் உருவாக்கப்படுவதுடன், 120-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேராசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

IITs to add 6,000 seats in robotics, physical-AI, and space-tech from 2027 with Mehta Family Foundation | Education News - The Indian Express

வேளாண்மை, மருத்துவம், பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான நவீனத் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது