‘வெடிகுண்டு வீசுவேன்...’ சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 
சீமான்

வெடிகுண்டு வீசுவேன்...’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தின் போது பேசியதாக சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரச்சாரத்தில் பேசிய சீமான், பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.

சீமான்

நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை வீசுகிறேன். என்ன நடக்கிறது என பார். ஏய்.... வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள். உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது. Be Carefull. சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள். 

திராவிட குப்பைகளை உரமாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்க்க வந்த பிள்ளைகள் நாங்கள். பெரியார் ஆரிய அடிமை; ஆரிய கூட்டாளி மட்டுமல்ல. ஆங்கிலேய அடிமையனாகவும் வாழ்ந்திருக்கிறார். பெரியார் எந்த மதத்துக்கு எதிரான குறியீடு?” என பேசியிருந்தார்.

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

சீமானின் இந்த பகிரங்க கொலை மிரட்டல் தொடர்பாக ஈரோடு போலீசில் கொளத்தூர் மணியை தலைவராக கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் நேற்று புகார் கொடுத்தனர். அதில், வன்முறையை தூண்டும் வகையிலும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய சீமானை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையின்போது வெடிகுண்டு வீசுவதாக சீமான் பேசியது குறித்த புகாரில் காவல்துறையினர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web