சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சிலிண்டர் விற்பனை.. எதிர்பாராதவிதமாக வெடித்ததால் நேர்ந்த விபரீதம்!

 
சிலிண்டர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் செட்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் முருகன், செல்வகணேஷ் ஆகியோர் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர் வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி சட்டவிரோதமாக வணிக சிலிண்டர்களில் கேஸ் நிரப்பி உணவகம் போன்ற கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

வாடகை வீட்டை சிலிண்டர் பஞ்சாக சட்ட விரோதமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் இருந்த போது சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் மேற்கூரைகள் முற்றிலும் சேதமடைந்தது, அதிர்ஷ்டவசமாக மற்ற சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்த முருகன், செல்வகணேஷ் ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விதிமீறி வைத்திருந்த சிலிண்டர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். மேலும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web