வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்தவருடன் கள்ளக்காதல்; கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி!

 
கள்ளக்காதல்

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி நடைப்பயிற்சிக்குச் சென்ற நபர் வாகனம் மோதி உயிரிழந்த விபத்து, காவல்துறையினரின் தீவிர விசாரணையில் மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய படுகொலை என்பது அம்பலமாகியுள்ளது.

விஜயபுராவைச் சேர்ந்த ராஜசேகர் (42) என்பவர் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண விபத்து என்றே கருதப்பட்டது.

கள்ளக்காதல்

ஆனால், ராஜசேகரின் மறைவில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இதுகுறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜசேகரின் மனைவி அஸ்வினி (30) மற்றும் அவரது கூட்டாளிகளின் சதி வெளிச்சத்திற்கு வந்தது.

அஸ்வினியின் வீட்டிற்குப் பெயிண்டிங் வேலைக்கு வந்து சென்ற ஆனந்த் (25) என்பவருடன் அஸ்வினிக்கு நெருக்கமான கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவுக்குக் கணவன் ராஜசேகர் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட அஸ்வினி திட்டமிட்டுள்ளார்.

கள்ளக்காதல்

இதன்படி, தனது கள்ளக்காதலன் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகளின் உதவியோடு, நடைப்பயிற்சிக்குச் சென்ற ராஜசேகர் மீது காரை மோதவிட்டுத் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அஸ்வினி மற்றும் ஆனந்தைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.