கள்ளக்காதல் விபரீதம்... கணவனுக்கு விஷ ஊசி போட்டுக் கொன்ற மனைவி!

 
கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப் கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே நிகழ்ந்த சம்பவம் மொத்த கிராமத்தையும் நிலைகுலைய செய்திருக்கிறது. இந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவரின் மனைவி கவிதா, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த வாலிபர் ஒருவருடன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இவர்களின் இந்த தவறான விவகாரம் கணவன் சுரேஷிற்குத் தெரியவந்ததால், அவர் தனது மனைவியைக்  கண்டித்து வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அடிக்கடி தம்பதியரிடையே தகராறு இருந்து வந்துள்ளது.

விஷ ஊசி

தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை ஒழித்துக்கட்ட முடிவு செய்த கவிதா, தனது கள்ளக்காதலனுடன் இணைந்து ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி சுரேஷ் தனது அறையில் இரவு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது, மருத்துவத்துறையில் வேலை பார்க்கும் தனது கள்ளக்காதலன் மூலம்  வீரியம் கொண்ட விஷ ஊசியை கணவனின் உடலில் செலுத்தியுள்ளார். விஷம் உடல் முழுவதும் பரவியதன் காரணமாக சுரேஷ் உடல் உபாதைகளால் படுக்கையிலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதல்

மறுநாள் காலை சுரேஷ் படுக்கையிலேயே சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷின் உறவினர்கள், சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்தப் பகுதி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதில், அவர் விஷஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலனை மடக்கிப் பிடித்து   பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கம்பிகளுக்குப் பின்னால் அடைத்தனர்.