கள்ளக்காதலால் விபரீதம்... ரகசிய கேமிராவில் அம்பலமான அதிர்ச்சி... மனைவியைக் கொன்று விட்டு கணவன் தற்கொலை!

 
மனைவி கொலை கள்ளக்காதல்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் மனைவியைக் கொன்று விட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பவன் சோனி - வர்ஷா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகின்றன. வர்ஷாவிற்கும் ஃபைசான் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், வர்ஷாவும் அவரது கள்ளக்காதலன் ஃபைசானும் இணைந்து பவன் சோனியையும், அவரது மகனையும் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

தன் மீது ஏதேனும் சதி நடப்பதை உணர்ந்த கணவர் பவன் சோனி, வீட்டின் உள்ளே ரகசிய கேமரா ஒன்றை மறைத்து வைத்துள்ளார். அதில் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் தன்னை கொலை செய்யத் திட்டமிடும் ஆடியோ உரையாடல் பதிவாகியுள்ளது. தனது மனைவியே தன்னைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டதை ஆடியோ மூலமாகக் கேட்டுப் பவன் சோனி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமும் மனவேதனையும் அடைந்த பவன் சோனி, தனது மனைவி வர்ஷாவைக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு அவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் நடைபெற்றபோது பவன் சோனியின் குழந்தைகள் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதல்

இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இந்தூர் காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சதித்திட்டம் மற்றும் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.