கள்ளக்காதல்... இரட்டைக் குழந்தைகளின் எதிர்காலத்தை மறந்து கணவனைக் கார் ஏற்றி கொன்ற கொடூர மனைவி!

 
கள்ளக்காதல்

கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரைக் காரை ஏற்றித் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு, விபத்து போல நாடகமாடிய மனைவியைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

விஜயபுராவைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் அஸ்வினி என்பவருக்கும் திருமணமாகி, ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் அவர்கள் புதிய வீடு கட்டியபோது, அங்கு வர்ணம் பூட்டுவதற்காக ஆனந்த் கல்லு என்ற பெயிண்டர் வந்துள்ளார். அப்போது அஸ்வினிக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதல்

கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் ராஜசேகரை வழியிலிருந்து அகற்ற அஸ்வினி திட்டமிட்டுள்ளார். இதற்காகக் காதலன் ஆனந்த் கல்லு மற்றும் அவனது கூட்டாளி சச்சின் படாலி ஆகியோருடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

திட்டமிட்டபடி, ராஜசேகர் வழக்கமான நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, நம்பர் பிளேட் இல்லாத கறுப்பு நிற ஸ்கார்பியோ காரை வேகமாக மோதி அவரை அவர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். அதன் பின்னர், தன் கணவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இறந்துவிட்டதாகக் காவல் நிலையத்தில் அஸ்வினியே நேரில் சென்று நாடகமாடிப் புகாரும் அளித்துள்ளார்.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும், மனைவி அஸ்வினியின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கவனித்த போலீசார், அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

இந்தத் தீவிர விசாரணையில், இது விபத்து அல்ல என்பதும், கள்ளக்காதலுக்காகவும் சொத்துக்காகவும் திட்டமிடப்பட்ட படுகொலை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, கணவனைக் கொன்ற மனைவி அஸ்வினி, அவரது காதலன் ஆனந்த் கல்லு மற்றும் உடந்தையாக இருந்த சச்சின் படாலி உட்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.