நான் சாகப் போறேன்.. தேர்வு ஹால் டிக்கெட்டை ஆடு தின்றதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!

 
ரேவதி

கர்நாடக மாநிலம் பசவ கல்யாண் கோகுல கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தேர்வு ஹால் டிக்கெட்டை ஆடு தின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி ரேவதி, ஹால் டிக்கெட் இல்லாமல் பள்ளிக்கு வர முடியாது என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் நான் இறக்கப் போகிறேன். இதற்காக வருந்துகிறேன் என்று எழுதி மூத்த சகோதரரிடம் கொடுத்துவிட்டு நேற்று இரவு 7 மணியளவில் தலைமறைவானார். அவர் காணாமல் போன தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவு 11.30 மணியளவில் உறவினர் வீட்டு கிணற்றில் இருந்து ரேவதியின் அழுகை சத்தம் கேட்டது.

மாணவி தற்கொலை

அவரது குடும்பத்தினர் அங்கு சென்று ரேவதியை கிணற்றில் இருந்து மீட்டனர். சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால் ரேவதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web