”போட்டுத் தள்ளிடுவேன்”.. பள்ளி மாணவிக்கு மிரட்டல் விடுத்த நடத்துனர்.. பரபரப்பு வீடியோ!!

 
பயணிகளை மிரட்டிய நடத்துனர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சேரம்பாடி வழியாக கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதிக்கு விடப்பட்ட அரசு பேருந்தில்,  ஏறிய பள்ளி மாணவி ஒருவர் சேரம்பாடி காப்பிகாடு பகுதியில் தன்னை இறக்கி விட நடத்துனரிடம் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த பேருந்து நடத்துனர், “இது எக்ஸ்பிரஸ் பேருந்து. சேரம்பாடி காப்பிகாடு பகுதியில் நிறுத்த முடியாது” என கூறியிருக்கிறார்.

 

இதையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் மாணவியை அப்பகுதியில் இறக்கிவிடும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியை இறக்கி விட்ட நடத்துனர், மாணவிக்கு ஆதரவாக பேசிய பயணிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பயணிகளிடம் “நீ அதிகாரிக்கு போன் பண்ணுவியா?” , வாடா போடா, பைத்தியக்காரன், போட்டுத் தள்ளி விடுவேன் போன்ற தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கடும் வார்த்தைகளை நடத்துனர் பயன்படுத்தியுள்ளார்.


இந்த காட்சிகள் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. அநாகரீகமாக நடந்துக்கொண்ட ஓட்டுநரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். 

From around the web