“நரகத்துல இருக்கேன்...அழைச்சுட்டுப் போங்க...” - தற்கொலைக்கு முன் கதறிய மிஸ் புனே அழகி !

 
துவிஷா துவிஷா

மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்ற மிஸ் புனே அழகிப் போட்டியில் பங்கேற்றுப் பிரம்மாண்ட வெற்றி பெற்றவர் முப்பத்தியொரு வயதுடைய துவிஷா சர்மா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அழகிப் போட்டியில் வென்ற இளம் பெண் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

பாதிக்கப்பட்ட துவிஷா சர்மாவிற்குத் தனியார் டேட்டிங் செயலி மூலமாகச் சமர்த் சிங் என்ற வழக்கறிஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறி கடந்த ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் துவிஷா சர்மா தனது கணவர் சமர்த் சிங் மற்றும் ஓய்வு பெற்ற பெண் நீதிபதியான மாமியார் கிரிபலா சிங் ஆகியோருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், "நான் தற்போது நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என்னை உடனடியாக இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்" என்று அவர் மரணத்திற்கு முன்பு கதறித் துடித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளி மானவி தற்கொலை

அவரது இந்தத் திடீர் மரணத்தில் மிகப்பெரிய மர்மம் நீடிப்பதாகக் கூறி, அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியாது எனப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள துவிஷாவின் கணவரைப் பற்றித் துல்லியமான தகவல் அளிப்போருக்குப்  ரொக்கப் பரிசு அளிக்கப்படும் எனப் போபால் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.