தீபாவளி தினத்தன்று கோவை, தஞ்சை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
தீபாவளி

வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தீபாவளி

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் தொடர் மழை மற்றும் இடி-மின்னல் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தீபாவளி

குறிப்பாகக் டெல்டா மாவட்டங்கள், தென் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.