தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை மாணவி

தமிழகத்தில் தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வரும் சூழலில், இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழை

குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் திடீர் நீர்ப்பெருக்கு அல்லது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.