தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மழை

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இரவு வரை மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

பிராந்தியத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

திடீர் மழை மற்றும் இடி-மின்னல் காரணமாகப் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.