ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு... பிப்.21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

 
ரயில்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு. இதைத் தெரிந்து கொண்டு உங்கள் பயண திட்டத்தை பாதுகாப்பானதாகவும், சந்தோஷமானதாகவும் மாற்றி கொள்ளுங்க. இம்மாதம் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகள் இந்த பாதையை இரட்டை இரயில் பாதையாக மாற்ற வேண்டுமென பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியை துவங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் 9 விரைவு விரைவு ரயில்கள் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 21 வரையும், திருநெல்வேலி செங்கோட்டை இடையே செல்லும் விரைவு ரயில்கள் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரையும், தூத்துக்குடி திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி இடையே செல்லும் விரைவு ரயில் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரைக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலப்பாளையம் ரயில் நிலையம்

மேலும் திருநெல்வேலி நாகர்கோவில் விரைவு ரயில் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரையும், புனலூர் நாகர்கோவில் விரைவு ரயில் பிப்ரவரி 15ம் தேதி அன்றும், நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு ரயில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளிலும், திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு ரயில் பிப்ரவரி 18ம் தேதியும் மறு மார்க்கமாக பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

38 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன. திருச்செந்தூர் பாலக்காடு இடையை இயக்கப்படும் விரைவு ரயில் பிப்ரவரி 11ம் தேதி திருநெல்வேலி வரையும், பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை வாஞ்சி மணியாச்சி வரையும் இயக்கப்பட்டு, பின் அங்கிருந்து பாலக்காடு செல்லும். செங்கோட்டை திருநெல்வேலி இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரயில்கள் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை சேரன்மகாதேவி வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி திருவனந்தபுரம் அதிவிரைவு விரைவு ரயில் பிப்ரவரி 11 முதல் 16 வரை திருநெல்வேலி வரையும், பிப்ரவரி 17 முதல் 20 வரை கோவில்பட்டி வரை மட்டும் இயக்கப்பட்டு, பின் அங்கிருந்து திருச்சிக்கு இயக்கப்படும்.

தென்னக ரயில்வே அறிவிப்பு

தாம்பரம் நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் பிப்ரவரி 14 முதல் 19 வரை விருதுநகர் வரையும், கோவை நாகர்கோவில் விரைவு ரயில் பிப்ரவரி 15 முதல் 20 வரை திண்டுக்கல் வரையும், ஈரோடு திருநெல்வேலி விரைவு ரயில் பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 15 வரை வாஞ்சி மணியாச்சி வரையும் இயக்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பிலாஸ்பூர் விரைவு ரயில் பிப்ரவரி 18ம் தேதியும், பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். தாதர் விரைவு ரயில் பிப்ரவரி 19 விருதுநகரிலிருந்து புறப்பட்டு செல்லும். ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா விரைவு ரயில் பிப்ரவரி 19 திருச்சியில் இருந்து புறப்பட்டு செல்லும். பாலருவி விரைவு ரயில் பிப்ரவரி 14 முதல் 19 வரை திருநெல்வேலி வருவதற்கு பதிலாக, கொல்லத்துடன் நிறுத்தப்படும்.

தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் பிப்ரவரி 15, 18 ஆகிய தேதிகளில் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாகவும், குருவாயூர் சென்னை எழும்பூர் விரைவு ரயில் பிப்ரவரி 19ம் தேதி திருச்சூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாகவும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் விரைவு ரயில் பிப்ரவரி 16ம் தேதி, மறு மார்க்கமாக 18ம் தேதியும் ஈரோடு, திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web