அக். 28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேற நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு!

 
இம்ரான்கான்

 பாலிவுட் நடிகர் அமீர் கானின் உறவினரும், நடிகருமான இம்ரான் கான், அக்டோபர் 28-ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மும்பை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்கக் குடியுரிமை கொண்ட இம்ரான் கான், கடந்த அக்டோபர் 10-ம் தேதி மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது இம்ரான் கானை போலீசார் தடுத்து வைத்துப் பின்னர் விடுவித்தனர்.

Imran Khan asked to leave India over anti-CEC protest, cops invoke Foreigners Act - India Today

வெளிநாட்டினர் சட்டம் தொடர்பாக நடவடிக்கை

இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவர் அரசியல் போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அக்டோபர் 28-ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இம்ரான் கானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் தொடர்ந்து நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.