சென்னையில் 5 நாட்களில் ரூ. 2.52 கோடி ரொக்கம், 12 கிலோ வெள்ளி பறிமுதல்.. களைகட்டும் தேர்தல் திருவிழா!

 
500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் பறக்கும் படையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 3 குழுக்கள் வீதம் மொத்தம் 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் ரூ. 2,52,48,015 (சுமார் 2.52 கோடி ரூபாய்), வெள்ளிப் பொருட்கள்: 12.85 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, எழும்பூர், விருகம்பாக்கம், பெரம்பூர், கொளத்தூர், துறைமுகம், ராயபுரம், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி மற்றும் ஆர்.கே. நகர் ஆகிய தொகுதிகளில் இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் சோதனை பறிமுதல் போலீசார்

தேர்தல் விதிமுறைகளை மீறிப் பணம் அல்லது பரிசுப் பொருட்களை விநியோகம் செய்ய முயல்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் அல்லது விதிமீறல்களைக் கண்டால் உடனடியாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.