கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,518 பேருக்கு தொற்று

 
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,518 பேருக்கு தொற்று

கேரளாவில் இன்று (ஜூலை 23) ஒரே நாளில் புதிதாக 17,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி 132 உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 11,067 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 30,83,962 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 13.63% ஆக உள்ளது.

கொரோனா மூன்றாவது அலையின் தாகத்தை தவிர்க்க, நாங்கள் தடுப்பூசியை போடும் பணியை தீவிர படுத்தி உள்ளோம். மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வேகத்தில், மத்திய அரசிடம் இருந்து போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைத்தால், கேரள மக்கள் தொகையில் 60% தடுப்பூசி போடலாம்.

மேலும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடும் பிரச்சாரம் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

From around the web