"கொளத்தூரில் 412 வாக்குகளுக்குப் பிறகு VVPAT-ல் தொழில்நுட்பக் கோளாறு" - மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம்!

 
கொளத்தூர்  சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன்

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு நடந்ததாக திமுக சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குச் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான சமீரன் பதிலளித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  மற்றும் விவிபாட் இயந்திரங்களின் செயல்பாடுகளைச் சரிபார்க்கும் பணி கடந்த ஜூலை 29 முதல் நடைபெற்று வருகிறது.

க்ட்ச்

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியின் இயந்திரங்களைச் சரிபார்த்தபோது, 412 வாக்குகள் வரை சரியாகப் பதிவாகியிருந்தன. அதன்பிறகு விவிபாட் இயந்திரத்தில் விளக்கு எரியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

வேட்பாளர்கள் வாரியாகப் பதிவான வாக்குகள் மற்றும் விவிபாட் தாள்கள் அனைத்தும் முறையாகச் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இயந்திரங்களில் எழுதப்பட்ட எண்கள் சரியாக இல்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு, இயந்திரங்களைத் திறந்து பார்த்து எண்ணைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

திமுக சார்பில் வைக்கப்பட்ட புகார்களுக்கு உரிய விளக்கங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் ஆணையர் சமீரன் தெளிவுபடுத்தியுள்ளார்.