பாகிஸ்தானில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ. 2,700... பால், பருப்பு விலையும் கிடுகிடு உயர்வு!

 
பாகிஸ்தான் ஆட்டிறைச்சி இறைச்சி கடை அசைவம் பாகிஸ்தான் ஆட்டிறைச்சி இறைச்சி கடை அசைவம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அங்குள்ள சாமானிய மக்கள் அத்தியாவசிய உணவுகளைக் கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்டுக்கறி விலை கிலோ ரூ. 2,700-ஐத் தொட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் கடும் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

பாகிஸ்தான் வறுமை பஞ்சம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பாகிஸ்தான் அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தியதால், சரக்கு போக்குவரத்து செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. எரிபொருள் தட்டுப்பாடால் விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகிறது.

பாகிஸ்தானில் ஆட்டுக்கறி 1 கிலோ ரூ.2,700க்கும், உளுந்து 1 கிலோ ரூ.580க்கும், அரிசி 1 கிலோ ரூ.400க்கும், 1 லிட்டர் பால் ரூ.230க்கும், 1 டஜன் வாழைப்பழம் ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ரொட்டி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் போன்ற முக்கிய நகரங்களில், நடுத்தரக் குடும்பங்கள் இறைச்சி மற்றும் பழங்களை வாங்குவதைக் கைவிட்டுள்ளனர். அடிப்படைத் தேவையான பால் மற்றும் அரிசி விலையே சாமானியர்களின் பட்ஜெட்டைத் தாண்டியுள்ளதால், அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச நிதியுதவி மற்றும் பிற நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாகிஸ்தான் அரசுக்கு, இந்த உள்நாட்டு விலைவாசி உயர்வு பெரும் சவாலாக மாறியுள்ளது.