வேலை பார்த்த நிறுவனத்திலேயே கைவரிசை.. ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்தை அமுக்கிய கணக்காளர் கைது!

 
நதியா

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வி.என்.பாளையம் நகரைச் சேர்ந்தவர் நதியா (33). சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட பிரபல கார் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் கணக்காளராக மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தங்கள் நிறுவனத்திற்கு சர்வீஸ் செய்ய வந்த கார்களை வாடிக்கையாளர்களிடம் தவறாக கணக்கு எழுதி ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக நிறுவன ஊழியர்கள் புகார் அளித்ததையடுத்து,  நிர்வாகம் அவரிடம் விசாரணை நடத்தியது.

ரூ.50,00,000 மோசடி!! அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய அவலம்!!

விசாரணையில், நதியா ஆறு மாதங்களாக  111 வாடிக்கையாளர்களின் வாகனங்களை பழுதுபார்த்து,  பெறப்பட்ட பணத்தை நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தாமல் போலி கணக்கு காட்டி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.12 லட்சத்து 59 ஆயிரம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நிர்வாகம் பணத்தை திருப்பி கேட்டபோது நதியா ரூ. 25,000 மட்டுமே கொடுத்துள்ளார்.

இதையடுத்து, நிறுவனத்தின் மேலாளர் இளவரசன், நிறுவனத்தில் நடந்த முறைகேடு சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயலிடம் புகார் அளித்தார். புகாரை விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். நதியா மோசடி செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றினர்.  மேலும், இது தொடர்பாக நதியாவை விசாரணைக்கு அழைத்தபோது, ​​நிறுவன மேலாளர் போலீசில் புகார் அளித்ததை அறிந்த அவர் தலைமறைவானார்.

இந்நிலையில் நதியா தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக நேற்று (டிசம்பர் 7) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் தஞ்சாவூர் சென்று அங்கு பதுங்கியிருந்த நதியாவை நேற்று இரவு கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.  அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து நதியா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!