கடந்த 5 ஆண்டுகளில் வனவிலங்கு தாக்குதலில் 692 பேர் உயிரிழப்பு.. 4,801 பேர் காயம்!

 
வனவிலங்கு
 


கேரளாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகளின் தாக்குதலில் 692 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வன விலங்குகள் தாக்குதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4,801 பேர் காயமடைந்துள்ளனர். இவை 2020 முதல் கடந்த மாதம் வரையிலான புள்ளிவிவரங்கள். வனவிலங்குகள் ஆண்டுக்கு ரூ.98 கோடி மதிப்பிலான பயிர்களை நாசம் செய்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது. 

காடு

ஜனவரி 1, 2017 முதல் செப்டம்பர் 30, 2017 வரை உயிரிழந்தவர்களுக்கு ரூ.17.75 கோடியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.44.12 கோடியும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. யானைகள் 115 பேரின் உயிரையும், காட்டெருமைகள் 10 பேரின் உயிரையும் பறித்துள்ளன. பெரும்பாலானோர் பாம்பு கடித்து மரணித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் வரை 2,518 காட்டு யானைகள் தாக்கி 31 பேர் காயமடைந்துள்ளனர். இதே காலகட்டத்தில் 141 சிறுத்தை தாக்குதல்களும், 49 புலி தாக்குதல்களும் பதிவாகியுள்ளன. 

அதே சமயம் கடந்த ஆறு மாதங்களில் புலிகளின் தாக்குதலில் யாரும் இறக்கவில்லை என்ற போதிலும் 78 கால்நடைகள் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இழப்பீடு கோரிய பெரும்பாலான விண்ணப்பங்கள் பாம்புகள், யானைகள், குளவிகள், காட்டெருமைகள், பன்றிகள், சிறுத்தைகள் மற்றும் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பானவை என்று தெரிய வந்துள்ளது.கேரள மாநிலத்தில் வயநாடு, இடுக்கி, பாலக்காடு, திருச்சூர், பத்தனம்திட்டா, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமிருக்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!