“2062-ல் தான்..” ரசிகர்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் குந்தவை!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, தற்போது சமூக வலைதளங்களில் பகிரும் ஒவ்வொரு பதிவும் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து வெளியாகும் பல்வேறு வதந்திகளுக்கு இடையே, த்ரிஷாவின் செயல்பாடுகள் நெட்டிசன்களால் உற்றுநோக்கப்படுகின்றன.
அண்மையில் ஒரு திருமண நிகழ்வில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது த்ரிஷா பதிவிட்டுள்ள ஒரு இன்ஸ்டா ஸ்டோரி காட்டுத்தீயாக பரவி வருகிறது.

நடிகை த்ரிஷா தனது பதிவில் தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகவும் சுவாரசியமான ஒரு கணக்கை பகிர்ந்துள்ளார். ஒரு மணி நேர தூக்கத்தை நாம் இழந்தால், அதனை உடல் ரீதியாக ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கணக்கின்படி பார்த்தால், தான் இழந்த தூக்கத்தை ஈடு செய்து முழுமையாக நன்றாக உணர 2062 ஆம் ஆண்டு தான் ஆகும் என த்ரிஷா கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதாவது இன்னும் 36 ஆண்டுகள் கழித்து தான் தனது தூக்கமின்மை பிரச்சனை சரியாகும் என அவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே சிரிப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் இரண்டு தரப்பாக பிரிந்து மோதிக் கொள்ளும் இந்த இக்கட்டான சூழலில், த்ரிஷா எதற்கும் கவலைப்படாமல் இத்தகைய பதிவுகளை இட்டு வருகிறார். தூக்கமில்லாமல் அவதிப்படுவதாக அவர் மறைமுகமாக எதனைக் குறிப்பிடுகிறார் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2062 ஆம் ஆண்டு வரை தூக்கத்திற்காக காத்திருக்க வேண்டும் என அவர் விளையாட்டாக சொன்னாலும், அதன் பின்னால் இருக்கும் மன அழுத்தம் என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். தற்போது இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.
