தவெக அரசு எந்த திசையில் செல்கிறது? - கி.வீரமணி கண்டனம்!

 
வீரமணி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தாக்கல் செய்ய வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தச் சுற்றறிக்கைக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இது தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை அதிகாரப்பூர்வமாகக் கோரிய விவரமா அல்லது வட்டாட்சியரின் தான்தோன்றித்தனமான முடிவா?" என கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் விவரங்களைச் சேகரிக்க முனையும் இத்தகைய நடவடிக்கைகளைக் சுட்டிக்காட்டி, "தமிழ்நாடு அரசு எந்தத் திசையில் செல்கிறது?" என்றும் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

வீரமணி

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா அந்தச் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்று உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குக் காரணமான குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.