பிப்ரவரியில் புதிய பாம்பன் பாலம் திறப்புவிழா... ராமேஸ்வரம் வந்த ரயில்கள்!

 
பாம்பன் பாலம்


ராமேஸ்வரம் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தின் கீழ் ரூ.580 கோடி பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் பிப்ரவரியில் திறக்கப்பட இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால்  மேடை அமைத்து, திறப்பு விழாவுக்கான ஒத்திகையும் நடத்தப்படுவதால், விரைவில் பாலம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலம்
 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று சோதனை ஓட்டமாக ரயில்கள் புதிய பாம்பன் பாலம் வழியாக இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கன்னியாகுமரி - ராமேஸ்வரம் விரைவு ரயில் பெட்டிகள் காலியாக மண்டபம் ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயில் பெட்டிகள் அனைத்தும் பூட்டியிருந்தது.

பாம்பன் பாலம்

அப்படியே அவை ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பிறகு சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில் பெடடிகள் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 6 மணிக்குப் புறப்பட்ட ரயில் ராமேஸ்வரத்தை 6,25க்கு வந்தடைந்தது. அவை புதிய பாலம் வழியாக இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

From around the web