பிரபல செயற்கை கருத்தரித்தல் மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

 
ஐஸ்வர்யா செயற்கை கருத்தரித்தல் மையம்

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், சென்னையில் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா, ஏஆர்சி மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி செயற்கை கருத்தரித்தல் மருத்துவ மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள 5-க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் இந்தச் சோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மருத்துவமனைகளின் முக்கிய கணக்கு வழக்குகள், நிதிப் பதிவேடுகள் மற்றும் வரவு-செலவு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர்.

இந்தச் சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தொடர்பான முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியிடப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.