BREAKING: பெங்களூரு மேகனா ஃபுட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

 
மேக்னா புட்ஸ்

 

பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் உணவக நிறுவனமான மேகனா ஃபுட்ஸ் குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் கர்நாடகா மற்றும் கோவா பிரிவுகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். 
பெங்களூருவில் கோரமங்களா, இந்திராநகர், ஜெயநகர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களிலும், மேகனா ஃபுட்ஸுடன் தொடர்புடைய பிற நிறுவனங்களிலும், அவற்றுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகள் நடைப்பெற்று வருகிறது. 

இன்கம்டேக்ஸ் ரெய்டு வருமான வரித்துறை


இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தொடங்கிய இந்த சோதனை பெங்களூருவில் பல இடங்களில் நடைப்பெற்று வருவதால் பெங்களூரு முழுவதும் அதிர்வலைகளை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வருமான வரி செலுத்துவதில் உள்ள முறைகேடுகள் காரணமாக இந்த சோதனைகள் நடைப்பெற்று வருவதற்கான முக்கிய காரணம் என தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் தெரிவித்தனர். 

வருமான வரி


பெங்களூருவில் மேகனா ஃபுட்ஸுடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்