சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.!
Aug 18, 2025, 12:25 IST
தமிழகத்தின் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று ஆகஸ்ட் 18ம் தேதி காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைகள் முக்கியமாக இரும்பு பொருள் தயாரிக்கும் தொழில் நிறுவனமான இன்டர் ஆர்க் பில்டிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகின்றன.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிஃபன்ஸ் காலனியில் உள்ள இந்நிறுவனத்தின் அலுவலகமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
