முதியோர் உதவித்தொகை உயர்வு?! அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!!

 
பென்சன்

தமிழகத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை என  அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று ஜூலை 22ம் தேதி சனிக்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்   ஸ்டாலின் தலைமையில் தமிழக  அமைச்சரவை கூட்டம் தொடங்கப்பட்டது.

பென்சன்

இதில்  அமைச்சர்கள், தலைமை செயலாளர் உட்பட   துறை ரீதியான அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்  செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ள  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தும் விதம், ஆளுநரின் செயல்பாடுகள் , அமலாக்க துறையின் சோதனைகள்  என பல பிரச்சனைகள்   குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.  அத்துடன் புதிய தொழில்கள் மற்றும் தொழில் விரிவாக்கம் ஆகியவற்றிற்கான அனுமதி குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.  

பெற்றோர் முதியோர் பென்சன் தம்பதி

குறிப்பாக இந்த கூட்டத்தில்   விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ஆயிரம் 1000ல் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web