22 வயதில் அசாத்திய சாதனை.. பயிற்சி வகுப்புக்கே செல்லாமல் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியான இளம்பெண்!

 
அனன்யா சிங்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரை  சேர்ந்தவர் அனன்யா சிங். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் தனது பள்ளிப் படிப்பை சிறந்த முறையில் முடித்து டெல்லி கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். சிறுவயதில் இருந்தே சிவில் சர்வீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்ட அனன்யா சிங், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் யுபிஎஸ்சி தேர்வெழுத தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான அனன்யா சிங், தற்போது மேற்கு வங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2023-ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அன்சார் ஷேக் என்ற 21 வயது இளைஞர் ஐஏஎஸ் அதிகாரியாக சாதனை படைத்தார். வெறும் 21 வயதில், 2016 ஆம் ஆண்டு அகில இந்திய ஐஏஎஸ் தேர்வில் 361வது இடத்தைப் பிடித்தார்.

தற்போது மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் ADM ஆக பணியாற்றி வரும் ஷேக்கின் பெற்றோர் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா கிராமத்தில் வசிக்கின்றனர். இவரது தந்தை ஆட்டோரிக்ஷா டிரைவர் என்பது கூடுதல் தகவல். அன்சார் இளம் வயது ஐஏஎஸ் அதிகாரி என்றாலும், பெண்களில் இளம் ஐஏஎஸ் அதிகாரி அனன்யா சிங். இந்தியாவில் பல பெண்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்தாலும், 22 வயதே ஆன அனன்யா சிங், முதல் முயற்சியிலேயே குறைந்த வயதில் ஐஏஎஸ் ஆகி சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, ஸ்வாதி மீனா 2007 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச கேடரின் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் 22 வயதில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். அவரும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் என்பது கூடுதல் தகவல்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web