இந்தியாவில் 330 மருந்து மாதிரிகள் தரமற்றவை... சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை!
புதுடெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில், 330 மருந்து மாதிரிகள் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், மத்திய மருந்து ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 42 மாதிரிகளும், மாநில அரசு மருந்து ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 288 மாதிரிகளும் தரமற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விவரங்களை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) நடத்திய வழக்கமான கண்காணிப்பு சோதனைகள் மூலம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளும் இதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட மருந்துகளைத் தயாரித்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
