ஸ்டாலினை சந்திக்க காத்திருக்கும் இண்டியா கூட்டணித் தலைவர்கள்... மாலை 4 மணிக்கு முக்கியப் பேச்சுவார்த்தை!

 
இண்டியா

மத்திய அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், அம்மசோதாவை எதிர்க்கக் கோரி வலியுறுத்துவதற்காக இண்டியா கூட்டணித் தலைவர்கள் 2 தனி விமானங்களில் சென்னை வந்துள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எம்.ஏ. பேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வருகை தந்துள்ளனர்.

ஸ்டாலின்

மு.க. ஸ்டாலினை சந்திப்பதற்காகச் சென்னை விமான நிலையம் வந்தடைந்த இத்தலைவர்கள், அங்கிருந்து புறப்பட்டுத் தற்போது தனியார் ஹோட்டலில் காத்திருக்கின்றனர். மாலை 4 மணிக்குச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தன்னை சந்திப்பதற்காக இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்னை வருகை தந்துள்ள நிலையில், அதற்கு முன்பாகத் தனது தாயாரைச் சந்திப்பதற்காக மு.க. ஸ்டாலின் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தொகுதி மறுவறை ஸ்டாலின் மறுவரை எஸ்.ஐ.ஆர். SIR

நாளை நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு தொடங்கவுள்ள சூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்த உள்ளனர். எனினும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவப் பங்கு பாதுகாக்கப்படுவதால் தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனத் திமுக தரப்பு ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.