நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

 
இந்தியா கிரிக்கெட் இந்திய

நியூசிலாந்து நாட்டில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டி20 கிரிக்கெட் நியூசிலாந்து

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் நடுவரிசை பேட்டர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் இந்திய அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியும் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் அந்த அணி 48.1 ஓவர்களில் 187 ரன்களுக்குச் சுருண்டது. இறுதியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவி, தொடரைச் சிறப்பாக நிறைவு செய்துள்ளது.