4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Oct 22, 2026, 17:29 IST
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
226 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் அளித்தார். பின்னர் நமன் தீர் 15 பந்துகளில் 42 ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார். இந்திய அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. <
