கிரெடிட் கார்டு பயன்படுத்தும் இளைஞர்கள் அதிகரிப்பு! 10 ஆண்டுகளில் 5.2 கோடியாக உயர்வு

 
கிரெடிட் கார்டு

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனத்தின் ‘Beyond the Swipe 2026’ ஆய்வறிக்கையின்படி, புதிதாக கிரெடிட் கார்டு பெறுவோரில் சுமார் 50 சதவீதம் பேர் 30 வயது அல்லது அதற்குக் குறைவானவர்கள்.

கிரெடிட் கார்டு

2016 மார்ச் மாதத்தில் 1.4 கோடியாக இருந்த கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை, 2026 மார்ச் மாதத்தில் 5.2 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டில் உள்ள கார்டுகளின் எண்ணிக்கை 2.1 கோடியிலிருந்து 10.7 கோடியாக அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டு நிலுவைக் கடன் தொகையும் ரூ.40 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.3.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கிரெடிட்

புதிதாக கார்டு பெறும் இளைஞர்களில் பலர் ஏற்கனவே பிற கடன்களைப் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் கார்டைப் பெற்ற 12 மாதங்களுக்குள், 69 சதவீத இளைஞர்கள் மற்றொரு கடன் வசதியையும் பெற்றுள்ளனர். இதனால், இளைஞர்களிடம் கடன் பயன்பாடு அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.