ரூ.2.12 லட்சம் கோடியில் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்! முப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள்

 
ராணுவ

 

இந்திய முப்படைகளின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பில் புதிய ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DAC Clears ₹2.12 Lakh Crore Defence Proposals, 82% Indigeno - Defence_Study

இதன்படி, இந்திய ராணுவத்துக்கு காமிகாஸ் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளும், கடற்படைக்கு எதிரி ஏவுகணைகளைத் திசைதிருப்பும் சாதனங்களும் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விமானப்படைக்குத் தேவையான ரேடார்களும் இந்தக் கொள்முதல் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.