தால் ஏரியில் மிதக்கும் தபால் நிலையம்! இந்தியாவின் வியக்க வைக்கும் சிறப்பு!

 
தபால் நிலையம்

 

இந்திய தபால் துறை உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. நாடு முழுவதும் நகரங்கள் முதல் தொலைதூர கிராமங்கள் வரை தபால் சேவையை கொண்டு சேர்க்கும் வகையில் மிகப்பெரிய வலையமைப்பை கொண்டுள்ளது. தற்போது 31.03.2025 நிலவரப்படி இந்தியாவில் 1,64,999 தபால் நிலையங்கள் உள்ளதாக இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

இந்திய தபால் துறையின் தனித்துவமான முயற்சிகளில் ஒன்றாக விளங்குவது ஸ்ரீநகரில் உள்ள மிதக்கும் தபால் நிலையம். காஷ்மீரின் புகழ்பெற்ற தால் ஏரியில் அமைந்துள்ள இந்த தபால் நிலையம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது.

தண்ணீரில் மிதக்கும் படகு போன்ற அமைப்பில் செயல்படும் இந்த தபால் நிலையம், காஷ்மீரின் இயற்கை அழகுடன் அஞ்சல் சேவையையும் இணைக்கும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ ஆண்டு அறிக்கைகளிலும் ஸ்ரீநகரின் தால் ஏரியில் உள்ள Floating Post Office குறிப்பிடப்பட்டுள்ளது.

How the world's only floating post office continues to deliver mail in conflict-torn Kashmir | Condé Nast Traveller India

தால் ஏரியில் ஷிகாரா படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா அனுபவங்களுக்காக வரும் பயணிகளுக்கு, இந்த மிதக்கும் தபால் நிலையம் கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளது. பாரம்பரிய தபால் சேவையைத் தாண்டி, ஒரு குறிப்பிட்ட இடத்தின் அடையாளமாகவும் இந்த தபால் நிலையம் மாறியுள்ளது.குறிப்பாக, இந்திய தபால் துறையின் மிகப்பெரிய வலையமைப்பில், தண்ணீரின் மீது அமைந்துள்ள இந்த வித்தியாசமான தபால் நிலையம் தனிச்சிறப்பு பெற்றதாக பார்க்கப்படுகிறது.