40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தகம் - பிரதமர் மோடி பெருமிதம்!

 
சுதந்திர தினம் மோடி

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து வெற்றிகரமாக வர்த்தகம் மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் நாட்டின் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்கள் முழுமையாக உள்ளடக்கப்பட்டுக் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உற்பத்தித் துறையில் (Manufacturing Sector) கிடைக்கும் வாய்ப்புகளை இந்தியா எந்தச் சூழ்நிலையிலும் நழுவ விடக்கூடாது என்றும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.