உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா... வேளாண் பொருட்களுக்கு 113% வரி - வர்த்தகப் போராக மாறுமா?

 
இந்தியா அமெரிக்கா இந்தியா அமெரிக்கா

உலகின் முன்னணிப் பொருளாதார நாடுகளில் இந்தியாவில்தான் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவின் வரி விதிப்பு முறைகள் சர்வதேச வர்த்தகத்திற்குப் பெரும் தடையாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கவலைக்குக் காரணமாக அமைந்துள்ள இந்தியாவின் சில முக்கியத் துறைகளின் வரி விபரங்களைப் பார்த்தால், இந்தியாவில் விவசாயப் பொருட்களுக்கான சராசரி இறக்குமதி வரி 113.1 சதவீதம் ஆக உள்ளது. இது உலக அளவில் மிக அதிகம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு அதிகபட்சமாக 150 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. காபி மற்றும் உலர் திராட்சை போன்ற பொருட்களுக்கு 100 சதவீதமும், ஆப்பிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 50 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது.

இந்தியா அமெரிக்கா

இந்தியாவின் இத்தகைய அதிகப்படியான வரி விதிப்பு மற்றும் வர்த்தகத் தடைகள் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் போட்டியிடுவது கடினமாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்கா கருதுகிறது.

இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலாவது கவலையளிக்கிறது... நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்கா தகவல்!

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய வர்த்தகத் துறை அமைச்சகம் நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், இந்தியாவின் இறக்குமதி வரிகள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாகவும், வளரும் நாடான இந்தியாவின் உள்நாட்டு விவசாயிகளையும், சிறு தொழில்களையும் பாதுகாக்க இத்தகைய வரிகள் அவசியம் என்றும் இந்தியா தொடர்ந்து வாதிட்டு வருகிறது.