பட்ஜெட் : செமிகண்டக்டர் துறைக்கு ₹40,000 கோடி - சிப் தயாரிப்பில் இந்தியா 'கிங்'!
Feb 1, 2026, 11:42 IST
இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0' (ISM 2.0) திட்டத்தின் கீழ் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கு ₹40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் குஜராத் மற்றும் தமிழகத்தில் செமிகண்டக்டர் ஆலைகள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு இந்தியாவை ஒரு சிப் ஏற்றுமதி நாடாக மாற்ற உதவும்.
இந்தத் திட்டத்தின் கீழ், செமிகண்டக்டர் தயாரிப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்குபவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை (Incentives) வழங்கப்படும். உலகளவில் சிப் தட்டுப்பாடு நிலவும் சூழலில், ஆட்டோமொபைல் முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள மின்னணு ஆலைகள் இந்த நிதி ஒதுக்கீட்டினால் பெரும் பலன் அடையும்.
