ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

 
ஆக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கிப் போட்டிக்கான இந்திய ஆண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடர்ந்து அணியை வழிநடத்துகிறார். இந்தத் தொடர் அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் மொஹாலி நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோல்கீப்பர்களாக சுராஜ் கர்கேரா, கிரிஷன் பகதூர் பதக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காப்புப் பிரிவில் ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடுகள ஆட்டக்காரர்களாக ஹர்திக் சிங், மன்பிரீத் சிங் உள்ளிட்டோரும், முன்கள வீரர்களாக அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பரீத் சிங், மன்தீப் சிங் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

India announces men's hockey squad for Asian Champions Trophy 2026

விஷ்ணு காந்த் சிங், அங்கத் பீர் சிங் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜலந்தரில் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். நவம்பர் 4-ம் தேதி அரையிறுதிப் போட்டிகளும், நவம்பர் 5-ம் தேதி பதக்கத்துக்கான போட்டிகளும் மொஹாலியில் நடைபெற உள்ளன. இந்திய அணி இதுவரை ஐந்து முறை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ள நிலையில், சொந்த மண்ணில் மீண்டும் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.