சர்வதேச சந்தையில் இந்தியாவுக்கு பின்னடைவு! எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி 36% சரிவு – என்ன காரணம்?

 
சரிவு

 

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் நிலவும் விலைப் போட்டி காரணமாக இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 36 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

India's Oilmeal Exports Drop To 12.82 Lakh Tonnes In April-August: SEA

இந்திய எண்ணெய் கரைப்பான் பிரித்தெடுப்போர் சங்கத்தின் (SEA) புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1.76 லட்சம் டன் எண்ணெய் வித்து புண்ணாக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2.76 லட்சம் டன்னாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் மொத்த ஏற்றுமதி 12.82 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 17.93 லட்சம் டன்னாக இருந்தது.

பிரேசில், அர்ஜென்டினா நாடுகளால் போட்டி

India's Oilmeal Exports Fall 28.51%; Soybean Meal Drops 73% | Nation Path India

இந்தியாவின் சோயாபீன் புண்ணாக்கு சர்வதேச சந்தையில் டன் ஒன்றுக்கு 622 டாலர் என்ற விலையில் விற்பனையாகிறது. ஆனால், சர்வதேச அளவுகோல் விலை சுமார் 445 டாலராக உள்ளது. இதனால் விலை குறைவாக வழங்கும் பிரேசில், அர்ஜென்டினா நாடுகளுடன் இந்தியாவால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, கால்நடை மற்றும் கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்களின் உள்நாட்டுத் தேவை அதிகரித்திருப்பதும், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிப்புகளும், சரக்கு கட்டண உயர்வும் ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

குறிப்பாக, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சோயாபீன் புண்ணாக்கு ஏற்றுமதி 73 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரத்தில், சீனா, வங்காளதேசம், தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தியாவின் முக்கிய இறக்குமதி சந்தைகளாகத் தொடர்கின்றன.