ட்ரோன் தொழில்நுட்பத்தை களமிறக்கிய இந்திய அஞ்சல் துறை - கிராமங்களுக்கு விரைவான அஞ்சல் சேவை!
கடினமான மலைப் பகுதிகள் மற்றும் தொலைதூரக் கிராமங்களுக்கு அஞ்சல்கள் மற்றும் பார்சல்களை விரைவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்திய அஞ்சல் துறை ட்ரோன் சேவையை முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.
சாலைப் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கும் விரைவாக அஞ்சல் சேவையை வழங்க இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.

வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டாலும், மருந்துகளும் அஞ்சல்களும் தடையின்றி மக்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, புவியியல் ரீதியாகச் சவால்கள் நிறைந்த அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் மொத்தம் 150 ட்ரோன் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மணி கணக்கில் தாமதமான அஞ்சல் விநியோகம் இனி சில நிமிடங்களிலேயே சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
