தொடர்ந்து 2 காலாண்டுகளாக ரூ.4,000 கோடியைத் தாண்டிய தபால்துறை வருவாய்!

 
தபால் துறை

 

இந்திய தபால்துறை தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக ரூ.4,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து 2 காலாண்டுகளாக இந்திய தபால்துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய்/India Post posts Rs 4,000 crore revenue for 2 consecutive quarters

2026-27 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ரூ.4,201.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 25 சதவீதம் அதிகம். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் மொத்த வருவாய் ரூ.8,212.7 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம்/Chennai: Postal Department Customer Grievance Redressal Camp

இந்த வளர்ச்சியில் பார்சல் சேவை முக்கியப் பங்கு வகித்துள்ளது. இப்பிரிவில் 71 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் 44 சதவீதமும், சர்வதேச வணிகத்தில் 38 சதவீதமும், கடிதங்கள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளில் 36 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வருவாய் உயர்வைத் தொடர்ந்து சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது