உலகின் அதிக தரவு மையங்கள் கொண்ட நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு 6-வது இடம்!

 
தரவு

 

உலக அளவில் அதிக தரவு மையங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 360 தரவு மையங்களுடன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் கிளவுட் தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தரவுகளைச் சேமித்து, நிர்வகிக்கும் தரவு மையங்களின் தேவை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், உலக அளவில் அதிக தரவு மையங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 360 தரவு மையங்களுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறது.

US has nearly 40% of world's data centres, India ranks sixth

2.1 ஜிகாவாட்டை தாண்டிய கொள்ளளவு

இந்தியாவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி தரவு மையங்களின் மொத்த கொள்ளளவு 2.1 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளது. மேலும், 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 500 மெகாவாட் கொள்ளளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை இணைந்து 57 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன.

இந்த முதலீடுகள் செயல்பாட்டுக்கு வரும்போது இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேலும் விரிவடைவதுடன், தரவு மையங்களின் எண்ணிக்கையும் கொள்ளளவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.