பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த இந்தியா.. 111 பதக்கங்கள் வென்று அசத்தல்..!

 
பாரா ஆசிய விளையாட்டு போட்டி
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் மொத்தம் 111 பதக்கங்களை வென்று இந்தியா புது சாதனை படைத்துள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 111 பதக்கங்களைப் பெற்று இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என 521 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது. 44 தங்கம், 46 வெள்ளி, 41 வெண்கலம் என 131 பதக்கங்களுடன் ஈரான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 42 தங்கம், 49 வெள்ளி, 59 வெண்கலம் என 150 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

Indian para athletes create history, bag 111 medals in Hangzhou Asian Para  Games - The Hindu

30 தங்கம், 33 வெள்ளி, 40 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் கொரியா நான்கம் இடம் பிடித்துள்ளது. 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

Para Asian Games: Indian athletes make history with record 111-medal haul -  Times of India

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறைந்த சர்வதேச போட்டிகளில் 111 பதக்கங்களை இந்தியா வென்றது இதுவே முதல்முறை. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில்கூட இந்தியா 101 பதக்கங்கள் மட்டுமே வென்றது. 2010-ம் ஆண்டு சீனாவின் கான்சோ நகரில் நடைபெற்ற முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களை மட்டுமே பெற்று 15வது இடம் பிடித்தது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றதே அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது.

From around the web