இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - தூதருக்கு 'சம்மன்' - இந்தியா கடும் கண்டனம்!

 
ஈரான் ஹார்முஸ் ஈரான் ஹார்முஸ்

சர்வதேச கடல் எல்லையில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 'சன்மார் ஹெரால்டு' என்ற கச்சா எண்ணெய் கப்பல் மற்றும் 'ஜக் அர்னவ்' என்ற சரக்குக் கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல்

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்கும் பொருட்டு, டெல்லியில் உள்ள ஈரான் நாட்டுத் தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக 'சம்மன்' அனுப்பி நேரில் வரவழைத்தது. இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச விதிகளுக்குப் புறம்பானது என்றும், இது போன்ற செயல்கள் இருநாட்டு உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என ஈரான் தூதரிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஹார்முஸ்

உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையில், இந்தியக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அந்தப் பகுதியில் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரானின் இந்த நடவடிக்கை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் கடற்படை ஆகியவை தற்போது கடல்சார் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.