யூத் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்! வரலாறு படைத்த இளம் குத்துச்சண்டை வீரர்கள்!
செனகல் நாட்டின் டாக்கரில் நடைபெற்று வரும் 2026 யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனை இருவரும் தங்களது இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் எல். அம்பேகர் மீத்தேய், அயர்லாந்து வீரர் ஜுபானி கிறிஸ்டியனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தொடர்ந்து பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் குஞ்சன், அல்ஜீரிய வீராங்கனை பென்சலா பவுதைனாவை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று மற்றொரு தங்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார்.
இதன் மூலம் யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டை வரலாற்றில் இந்தியா முதல் முறையாக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கிய இரண்டு குத்துச்சண்டை வீரர்களுமே தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
