ஆசியக் கோப்பைக்கு முன்னேறியது இந்தியா - 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை!
Oct 12, 2026, 19:15 IST
மலேசியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து அணி, 2027 ஆசியக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
மலேசியாவின் செலாயாங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்திப் பெருவெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ரெடிமா தேவி சிங்ஹமாய், பிரிதிகா பர்மன், அனுஷ்கா குமாரி மற்றும் நிதி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இதன் மூலம், தொடர்ந்து இரண்டு முறை ஆசியக் கோப்பைத் தொடர்களுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய மகளிர் தேசிய அணி என்ற பெருமையை இந்த இளம் அணி பெற்றுள்ளது.
